ADDED : ஜூன் 17, 2024 12:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலர், மலர்விழி நேற்று கூறியதாவது:
குறைந்தபட்ச ஓய்வூதியம், 9,000 ரூபாய், பணிக் கொடையாக, லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தமிழகம் முழுதும் உள்ள சத்துணவு மையத்தில், 63,000 காலி பணியிடங்கள் உள்ளன; அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும். இதுபோன்ற, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 21ல் அனைத்து மாவட்டங்களிலும் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.
தொடர்ந்து, ஜூன் 24ல் சென்னை தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்களையும், அரசு உயர் அதிகாரிகளையும் சந்தித்து, மனு அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.