ADDED : ஏப் 17, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகம், புதுச்சேரியில், 40 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடக்க உள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள், ஓட்டுச்சாவடி மையங்களாக செயல்படுகின்றன. அதனால், இந்த பள்ளிகளில், இம்மாதம் 15ம் தேதியில் இருந்து எந்த விதமான வகுப்புகளும் நடத்தப்படவில்லை. ஓட்டுச்சாவடியாக இல்லாத தனியார் பள்ளிகளில், தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஓட்டுச்சாவடி இல்லாத பள்ளிகளும், வரும், 21ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் இருக்குமாறு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஓட்டளிப்புக்கு பிந்தைய 2 நாட்களும், தேர்தல் பணிகள் தொடரும் என்பதால், அனைத்து பள்ளிகளும், வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

