ADDED : ஜூன் 27, 2024 02:23 AM
சென்னை:சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படித்து நுாலாக கொண்டு வரும் சிறப்பு திட்டம், 3.50 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில், 2.80 கோடி ரூபாயில் மின்னொளியுடன் கூடிய சிற்ப காட்சிக் கூடம் அமைக்கப்படும்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மனோரா நினைவுச் சின்னம் 2.75 கோடியில் மேம்படுத்தப்படும்
தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களை பராமரிக்க, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் நிதி 2 கோடி ரூபாயிலிருந்து, 3 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்
செங்கல்பட்டு விராலுார், ஓணம்பாக்கம் சமண சிற்பங்கள், தஞ்சை ஒரத்தநாடு முக்தாம்பாள் சத்திரம், திருப்பூர் தாராபுரம் கல் இசை மண்டபம், ஊத்துக்குளி நந்தவனக் கிணறு, ராணிப்பேட்டை ராஜா ராணி மண்டபம், தர்மபுரி ஆதனுார் கல் வட்டம், ராமநாதபுரம் ராசசிங்கமங்கலம் ஆறுமுகம் கோட்டை, நெல்லை பணகுடி கல் மண்டபம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.