பிரிட்டன் தேர்தலில் ஓட்டளிக்க தமிழர்களுக்கு சீமான் வலியுறுத்தல்
பிரிட்டன் தேர்தலில் ஓட்டளிக்க தமிழர்களுக்கு சீமான் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 02, 2024 02:26 PM

சென்னை: 'பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துக்கள்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்,
இது குறித்து, எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் சீமான் பேசியதாவது: பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிடும் என்னருந்தமிழ் உறவுகளுக்கு வெற்றி வாழ்த்துகள். ஜூலை 4ம் தேதி அன்று நடைபெறவிருக்கும் ஓட்டுப்பதிவில், என் உயிர்க்கினிய பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவரும், வரலாறு தந்துள்ள இப்பெரும் வாய்ப்பைத் தவறவிடாது பயன்படுத்தி நமது உறவுகளை வெற்றிபெற செய்ய வேண்டும்.
தமிழ்ப் பேரினத்தின் ஓர்மையையும், வலிமையையும் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டுங்கள். மறக்காமல் ஓட்டுச்செலுத்துங்கள். நாம் மானத்தமிழர் என்பதை உலகிற்குக் காட்டுங்கள். இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை. இனம் ஒன்றாவோம். இலக்கை வென்றாவோம். இவ்வாறு சீமான் பேசியுள்ளார்.