ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை மறுப்பு
ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறை மறுப்பு
UPDATED : ஏப் 22, 2024 12:24 PM
ADDED : ஏப் 22, 2024 12:09 PM

சென்னை: பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி சென்ற நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் சதீஷ், பெருமாள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறினர். இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரிக்க மறுப்பு
இந்நிலையில், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யுமாறு சுயேட்சை வேட்பாளர் ராகவன் தொடர்ந்த வழக்கு, இன்று (ஏப்ரல் 22) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‛‛தேர்தலின் போது பறிமுதல் செய்யப்படும் பணம், சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது' எனக் கூறி விசாரணை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 24ம் தேதிக்குள் அமலாக்கத்துறை உரிய பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

