செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு:ஐசியூவில் அனுமதி
செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு:ஐசியூவில் அனுமதி
UPDATED : ஜூலை 21, 2024 08:40 PM
ADDED : ஜூலை 21, 2024 04:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, மேல் சிகிச்சைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் டாக்டர்கள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு நிராகரிக்கப்பட்டநிலையில் செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீடாக புதிய மனு தாக்கல் செய்யப்படுகிறது.