ADDED : மார் 31, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக காவிரி விவசாயிகள் சங்க வேட்பாளருக்கு கப்பல் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிடுகிறது. சங்கத்தின் சார்பில், செந்தில்குமார் என்ற விவசாயி வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கப்பல் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
சின்னம் உறுதியான நிலையில், சங்க பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.

