ADDED : மே 30, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், கிராம் வெள்ளி விலை, 102.20 ரூபாயாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,740 ரூபாய்க்கும்; சவரன், 53,920 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 101 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 35 ரூபாய் உயர்ந்து, 6,775 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 280 ரூபாய் அதிகரித்து, 54,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு, 1.20 ரூபாய் உயர்ந்து, 102.20 ரூபாய்க்கு விற்பனையானது. ஆபரணங்கள் மற்றும் கலைப்பொருட்களாக மட்டுமின்றி, மின்சாதனங்கள் தயாரிப்பு என, தொழிற்சாலைகளிலும் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாகவே, வெள்ளி விலை தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.