ADDED : மார் 30, 2024 07:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில், தேர்தல் பறக்கும் படையால், 101 கோடி ரூபாய் மதிப்பிலான, பணம், தங்கம், மதுபானம் மற்றும் இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தவிர்க்கும் வகையில், 50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை, தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழகம் முழுதும் நேற்று காலை, 9:00 மணி வரை, 43.64 கோடி ரூபாய் ரொக்கம், 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள்; 61 லட்ச ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள்; 54.29 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள்; 1.09 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் என, 101.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

