ADDED : மே 07, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோடைக் காலத்தில், மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின் தடை தொடர்பாக மின்னகத்தில், 24 மணி நேரமும் புகார் தரலாம். சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவித்து, விரைந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மற்றும் புறநகரில், இரவு நேரங்களில் டிரான்ஸ்பார்மர், மின் கம்பி உள்ளிட்ட சாதனங்களில், அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனே சரிசெய்ய, 60 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில், இரவில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிகம் உள்ள காரணத்தால், சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் இடையூறு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.
- சிவ்தாஸ் மீனா
தலைமை செயலர்