ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்
ஹூப்ளி - ராமேஸ்வரம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : ஏப் 05, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை:
பயணியர் கூட்ட நெரிசலை குறைக்க கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஏப். 6 முதல் ஜூன் 29 வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி சனி காலை 6:30 மணிக்கு ஹூப்ளியில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு ராமேஸ்வரத்தை அடையும்.
மறுமார்க்கத்தில் ஏப். 7 முதல் ஜூன் 30 வரை ஞாயிறு இரவு 9:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7:25 மணிக்கு ஹூப்ளியை அடையும்.
இந்த ரயில் ஓசூர் தர்மபுரி சேலம் நாமக்கல் கருர் திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

