UPDATED : அக் 09, 2026 10:04 PM
ADDED : அக் 09, 2026 09:48 PM
திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க., வேட்பாளர் சுகன்யாவை, கட்சித் தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி, உற்சாகப்படுத்தினார்.
தாராபுரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சுகன்யா, 57,370 ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். கடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் இந்திராணி 64,373 ஓட்டுகள் பெற்றிருந்தார்.
நேற்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சுகன்யாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஸ்டாலின் பேசினார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்ததற்கு சுகன்யா நன்றி தெரிவித்தார்.
அப்போது, தேர்தலில் போட்டியிடும் துணிச்சலையும், பிரசாரத்தில் அவர் காட்டிய உழைப்பையும் ஸ்டாலின் பாராட்டினார். மேலும், 57 ஆயிரம் பேர் தி.மு.க.,வுக்கு வாக்களித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
