மாறுதல் ஒன்றே மாறாதது: அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் பதில்
மாறுதல் ஒன்றே மாறாதது: அமெரிக்கா செல்லும் ஸ்டாலின் பதில்
UPDATED : ஆக 27, 2024 09:26 PM
ADDED : ஆக 27, 2024 08:57 PM

சென்னை: அரசு முறைப்பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழகத்திற்கான முதலீட்டை மீட்க 17 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல் திட்டமிட்டுள்ளார். இதன்படி இன்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்க உள்ளார்.
முன்னதாக இரவு 8:45 மணியளவில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தன் வீட்டிலிருந்து சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு மூத்த அமைச்சர்கள், தொண்டர்கள், வரவேற்றனர்.
அங்கு அவர் அளித்த பேட்டி, தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்கிறேன். முதலீட்டை மீட்க இது போன்ற பயணங்களை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே துபாய், சிங்கப்பூர், ஸ்பெயின், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். இதன் வாயிலாக தமிழகத்திற்கு முதலீடுகள் வந்துள்ளன. இதில் 17 புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மூலம் ரூ. 9,99,039 கோடியில் திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ. 3,450 கோடி மதிப்பிலான திட்டங்கள் முன்னேற்ற நிலையில் உள்ளன. 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம்.
அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வி, மாறுதல் ஒன்றே மாறாதது ‛‛வெயிட் அன்ட் சி'' என்றார். ரஜினியும், துரைமுருகனும் நண்பர்கள். நகைச்சுவையை பகைச்சுவையாக பார்க்காதீர்கள் என்றார்.