ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி நடிகர் தனுஷுடன் சந்திப்பு
ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி நடிகர் தனுஷுடன் சந்திப்பு
ADDED : ஆக 26, 2026 03:35 AM

சென்னை: நடிகர் தனுஷை, ஆர்.எஸ்.எஸ்., மாநில முக்கிய தலைவர் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்கை தொடங்கி, விஜய் ஆட்சியை பிடித்துள்ளார். இது பிரபல நடிகர்கள் பலருக்கு, அரசியல் ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது.
முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தனது ரசிகர் மன்ற பணிகளை தீவிரப் படுத்தி உள்ளார்.
தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில், மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன. விஜயை பின்பற்றி, அவரும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக ஆர்.எஸ்.எஸ்., மாநில முக்கிய நிர்வாகி நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை சந்திப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தனுஷை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கு வேறு எந்த பின்னணியும் இல்லை' என்றனர்.
