ADDED : செப் 01, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிளஸ் 2 படித்த மாணவர்களில், உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர் கல்விக்கு ஊக்கப்படுத்தும் வகையில், 'உயர்வுக்குப் படி' என்ற நிகழ்ச்சி, நாளை துவங்கி, அக்., 1 வரை, பள்ளிகளில் நடக்க உள்ளது.
இந்த திட்டத்தை, உயர் கல்வி வழிகாட்டி குழு, பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர் குழு ஆகியவை செயல்படுத்த உள்ளன.
அவர்கள், பிளஸ் 2 தேறிய, தவறிய மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, தற்போதைய நிலையை கண்டறிந்து வருகின்றனர்.
அதில், பிளஸ் 2க்கு பின் படிப்பை கைவிட்ட மாணவர்களின் விபரங்களையும், அதற்கான காரணங்களையும் பட்டியலிடுகின்றனர்.
இதன் அடுத்தக்கட்டமாக, உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில், இந்நிகழ்ச்சி நடக்க உள்ளதாக, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி கூறி உள்ளார்.