ADDED : ஜூன் 25, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜோலார்பேட்டை: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை விஜயநந்தினி, வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பள்ளிக்கு வருவதும்; பள்ளி திறந்து ஒரு மாதமாகியும், ஒரு நாள் கூட பாடம் நடத்தவில்லை என கூறப்படுகிறது.
அதிருப்தியடைந்த மாணவ, மாணவியர் நேற்று காலை, பள்ளி வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.டி.ஓ., ராஜேந்திரன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் மாணவ, மாணவியரிடம் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.