ADDED : மே 30, 2024 01:41 AM
சென்னை:மாணவர்களின் ஆதார் எண்களை, வரும், 6ம் தேதி முதல் பள்ளிகளிலேயே புதுப்பிக்க, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மாவட்ட கலெக்டர்களுக்கு, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதம்:
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதுடன், விலையில்லா பாட புத்தகம், நோட்டு புத்தகம், லேப்டாப், சீருடை உள்ளிட்ட விலையில்லாத திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. மேலும், மாணவர்களுக்கு வங்கி கணக்கில் உதவித்தொகை வழங்க ஆதார் எண் அவசியமாகிறது. இதற்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை புதுப்பித்தல் அவசியம்.
எனவே, பள்ளிகளிலேயே எல்காட் நிறுவனத்தின் வழியே, ஆதார் எண் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படும். புதிய கல்வியாண்டின் துவக்க நாளான, ஜூன், 6 முதல், அனைத்து வகை பள்ளிகளிலும், ஆதார் பதிவு சிறப்பு முன்னெடுப்பு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த கடிதத்துடன், ஆதார் எண் புதுப்பிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இணைக்கப்பட்டு உள்ளன.