ADDED : ஏப் 21, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார் : அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சி கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான சவுந்தரநாயகி அம்மன் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 20ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.
நேற்று முன் தினம் காலை 6:10 மணியில் இருந்து 6:20 மணி வரை சூரிய ஒளி, லிங்கத்தின் மீது விழுந்து ஒளிர்ந்தது.
இந்த அரிய நிகழ்வு 10 நிமிடங்களுக்கு நீடித்தது. ஏராளமான பக்தர்கள் சிவன் மற்றும் சூரியனை தரிசனம் செய்தனர்.

