' ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் வேதனையை தரும் ': உயர் நீதிமன்றம் கருத்து
' ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் வேதனையை தரும் ': உயர் நீதிமன்றம் கருத்து
ADDED : மே 17, 2024 04:24 AM

மதுரை: சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த சரவணன்,தன் தாய் அரசுப் பணியில் இருந்ததை மறைத்தும், சிறுவயதில் அவர் கைவிட்டு சென்றதாக கூறியும், 1989ல் கருணைப் பணி நியமனம் பெற்றதாக கூறப்படுகிறது.இதனால்,ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.
இதை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் சரவணன் மனு செய்தார். மனுவை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா விசாரித்தார்.
அரசு தரப்பு:மோசடியாக வேலை பெற்ற நபருக்கு ஆதரவாக பள்ளிக் கல்வித்துறை செயல்பட முடியாது.
நீதிபதி: பணிக்காலத்தை நிறைவு செய்ய மனுதாரரை அனுமதித்த பின், வேலைவாய்ப்பு பெறுவதில் உண்மைகளை மறைத்து விட்டதாக கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வுபெறும் தேதியில் சஸ்பெண்ட் செய்தால் மன வேதனையை தரும். அதுபோல் வேறு எந்த மாதிரியான மன வேதனையும் இருக்க முடியாது. சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.அனைத்து பலன்களுடன் மனுதாரரை ஓய்வுபெறஅனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

