தமிழக காற்றாலை மின் உற்பத்தி 4,529 மெகாவாட்டாக உயர்வு
தமிழக காற்றாலை மின் உற்பத்தி 4,529 மெகாவாட்டாக உயர்வு
ADDED : மே 28, 2024 09:18 PM
தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, துாத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகளவில் உள்ளன. அதன்மூலம் அதிகபட்சம், 9,020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். தென்மேற்கு பருவகாற்று தீவிரம் அடையும், ஜூன் இறுதியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். நடப்பாண்டு கோடையில் பருவகாற்று தீவிரம் அடைய, அதற்கேற்ப காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்தது.
அதேநேரம் காற்று வீசாததால் கடந்த, 16, 18ல் காற்றாலை மின் உற்பத்தி, 'பூஜ்யம்' ஆக இருந்தது. காற்றின் வேகம் சற்று அதிகரிக்க, கடந்த, 13ல் காற்றாலை மின் உற்பத்தி, 7 மெகாவாட், 15ல், 5 மெகாவாட்டாக சற்று உயர்ந்தது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரிக்க, 22ல், 384; 23ல், 1,315 மெகாவாட் என, படிப்படியாக உயர்ந்தது. 25ல், 4,087; 26ல், 4,444 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி நேற்று முன்தினம், 4,529 மெகாவாட் ஆக அதிகரித்தது. அதற்கேற்ப நேற்று முன்தினம், 3,130 மெகாவாட்டாக இருந்த அனல்மின் உற்பத்தி நேற்று, 2,674 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. அதேநேரம் நேற்று, காற்றாலை மின் உற்பத்தி, 4,169 மெகாவாட் ஆக இருந்தது.
- நமது நிருபர் -