ADDED : ஏப் 21, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. இந்தக் கடைகளுக்கு, லோக்சபா தேர்தலை முன்னிட்டு இம்மாதம், 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மூன்று நாட்கள் 'சரக்கு' கிடைக்காத நிலையில், இன்றும் விடுமுறை என்பதால், மது வகைகளை வாங்க, நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு, 'குடி'மகன்கள் படையெடுத்தனர். இதனால், அனைத்து மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
நேற்று மாலை நிலவரப்படி, 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மது வகைகள் விற்பனையாகி இருந்தன.

