ADDED : ஜூன் 27, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நாளை முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என, டிட்டோஜாக் ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
தொடக்க பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, டிட்டோஜாக் அமைப்பின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.
கூட்ட முடிவில், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்கவும், 243ம் எண் அரசாணையை ரத்து செய்யவும் கோரி, நாளை முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைநகரங்களில் நாளை ஆர்பாட்டமும், வரும் 29 முதல் ஜூலை 2 வரை, ஆசிரியர் சந்திப்பு கூட்டங்கள், ஜூலை 3ல் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, கூட்டமைப்பு அறிவித்துள்ளது.