தமிழகத்தில் பருவமழை துவக்கம்: 18 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெப்பம்
தமிழகத்தில் பருவமழை துவக்கம்: 18 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெப்பம்
UPDATED : மே 31, 2024 05:17 PM
ADDED : மே 31, 2024 06:14 AM

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தில் நேற்று துவங்கியது. அதேநேரத்தில், தமிழகம், புதுச்சேரியில், 18 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரளா மற்றும் தமிழகத்தில், தென்மேற்கு பருவமழை நேற்று துவங்கியது. இதையொட்டி, இன்று தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், நாளை முதல் இரு நாட்களுக்கு கனமழை பெய்யும்.
திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், வரும், 3ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.
தமிழகத்தின் சில மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை தற்போதைய நிலையை விட, 2 டிகிரி செல்ஷியஸ் வரை குறையும். அதேநேரம் இயல்பான அளவில் இருந்து, சற்று அதிகமாக வெப்பநிலை பதிவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், 'நாடு முழுதும் வெப்ப அலை மற்றும் வெப்பக்காற்று வீசுகிறது. தமிழகத்திலும் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. 'தென்மேற்கு பருவ அதி மழை துவங்கியுள்ளதால், லை அதன் குளிர்ந்த காற்று யை பல்வேறு மாவட்டங்களின் நிலப்பரப்பில் பரவும் நிலையில், கோடை வெப்பம் படிப்படியாக மற்று தணியும்' என்றனர்.
எகிறியது வெப்பநிலை
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம் மற்றும் திருத்தணியில், 42 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.தமிழகம், புதுச்சேரி யில், 18 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், 42; வேலுார், 41; நுங்கம்பாக்கம், கடலூர், ஈரோடு, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, புதுச் சேரி, 40; தஞ்சாவூர், திருச்சி, மந்திருப்பத்துார் காரைக்கால், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது.
மீனவர்களுக்கு தடை
குமரிக்கடல், தென் மாவட்ட கடலோரம், வங்கக் கடலின் தெற்குப் பகுதி, அந்தமான், லட் சத்தீவு, மாலத்தீவு, கேரள சுடலோர பகுதிகள் ஆகிய வற்றில், இன்றும், நாளை யும் மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த நாட் களில் மீனவர்கள் மேற் கண்டபகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.