அமைச்சருக்காக வெடித்த பட்டாசால் தீப்பற்றிய கோவில் கோபுரம்
அமைச்சருக்காக வெடித்த பட்டாசால் தீப்பற்றிய கோவில் கோபுரம்
ADDED : மார் 10, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், திருமால்பூரில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, அஞ்சனாட்சி அம்மன் உடனுறை மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசி மக பிரம்மோத்சவ விழா நடந்து வருகிறது.
ஏழாம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், அமைச்சர் காந்தி பங்கேற்றார். அவரை வரவேற்று, தி.மு.க.,வினர் வெடித்த பட்டாசு தீப்பொறி பறந்து, அப்பகுதியில் கும்பாபிஷேக பணிக்கு தயாராகி கொண்டிருந்த செல்வவிநாயகர் கோவில் கோபுரம் மீது விழுந்தது.
தீப்பொறியால், கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த தென்னங்கீற்று எரிந்தது. திருமால்பூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.