ADDED : செப் 14, 2024 08:58 PM
தே.மு.தி.க., இன்றைக்கும் அ.தி.மு.க., கூட்டணியில் தான் உள்ளது. வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கும் கூட்டணி தொடரும். தே.மு.தி.க.,வுக்கு ராஜ்யசபா பதவி கொடுப்பது குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முடிவெடுப்பார். தேவையானபோது, அதுகுறித்து நாங்களும் வலியுறுத்துவோம். அ.தி.மு.க., ஒன்றிணைந்து, 2024 லோக்சபா தேர்தலை சந்தித்திருந்தால், பெரிய வெற்றியை பெற்றிருக்கலாம். வெற்றிக்காகவாவது, அக்கட்சி ஒன்றிணைய வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் தே.மு.தி.க.,விற்கு அழைப்பு விடுக்கட்டும். பின், அது குறித்து பேசுவோம்.
முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்விதான். 7500 கோடி ரூபாய்க்கான முதலீட்டை இழப்பதற்காக அங்கு போயிருக்கத் தேவையில்லை. இங்கிருந்தபடியே, ஒவ்வொரு நிறுவனத்தையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம்.
சுதீஷ், துணைப் பொதுச்செயலர், தே.மு.தி.க.,