ADDED : ஜூன் 05, 2024 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'தேர்தல் நடத்தை விதிமுறைகள் நாளை முடிவுக்கு வரும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது உட்பட வேறு பிரச்னைகள் குறித்து, அரசியல் கட்சிகளிடம் இருந்து புகார் எதுவும், தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு வரவில்லை. தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக முடிந்தது. தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் முடிவுகளை ஜனாதிபதியிடம் வழங்குவார். அதன்பின், மத்தியில் புதிய ஆட்சி அமைக்க நடவடிக்கை துவங்கும். தேர்தல் நடத்தை விதிகள், நாளை வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.