ADDED : ஜூலை 05, 2024 10:17 PM
சென்னை:பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
இடைத்தேர்தலில் நிமிடத்திற்கு நிமிடம் பண மழையும், பரிசு மழையும் பொழிகிறது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பொறுப்பில் உள்ள கிராமங்களில், தினமும் காலையில், வாக்காளர்களுக்கு 'டோக்கன்' வழங்கப்படுகிறது.
மாலையில், அந்த டோக்கனுக்கு 26 கிலோ அரிசி மூட்டை, மளிகை சாமான்கள், பிரியாணி, மது, 500 ரூபாய் ரொக்கம், தங்க மூக்குத்தி, நிறைவாக 3,000 ரூபாய் என பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். ஆளுங்கட்சி கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் பணத்தில், ஒரு லட்சம் ரூபாய் கேட்டால் கூட கொடுப்பர்.
விலை மதிக்க முடியாத ஓட்டுரிமையை விற்கக்கூடாது என்பதை சிந்தித்து, விக்கிரவாண்டி மக்கள் ஓட்டளிக்க வேண்டும். இத்தனை அத்துமீறல்களையும் வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையத்தை இழுத்து மூடி விடலாம். வாழ்க ஜனநாயகம்; வளர்க டோக்கன் தேர்தல்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.