ஓட்டுப் போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத!: பாட்டு பாடி ஓட்டு கேட்ட சீமான்
ஓட்டுப் போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத!: பாட்டு பாடி ஓட்டு கேட்ட சீமான்
ADDED : மார் 31, 2024 01:00 PM

காரைக்குடி: 'ஓட்டுப் போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத!; கண்ட கண்ட சின்னங்களை கண்டு கலங்கி நிற்காத!' என பாட்டு பாடி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு கேட்டார்.
சிவங்கை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் பிரசாரத்தில் பேசியதாவது:
இந்தியாவில் தற்போது அரசியல் மலிவான வியாபாரமாக மாறிவிட்டது. தமிழ் பிள்ளைகள் நாங்கள் மலிவான அரசியல் செய்யும் ஆட்களல்ல. அதனால் தான் நாம் தமிழர் தனித்து போட்டியிடுகிறது. தேர்வு வைத்து அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பிரதமர், முதல்வர் பொறுப்பு கொடுத்தால் அறிவார்ந்தவர்கள் நாட்டை ஆள்வர்.
கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு தேர்வு வைப்பது போல், எம்.பி, எம்.எல்.ஏ, முதல்வர், பிரதமர் ஆகவும் தேர்வு வைக்க வேண்டும். முக்கிய பதவிகளுக்கு தேர்வு வைத்திருந்தால் பிரதமர் மோடி, இ.பி.எஸ்., போன்றோருக்கு எந்த பதவியும் கிடைத்திருக்காது.
உங்களை நம்பி நிற்கிறோம். வெல்ல வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. ஓட்டு என்பது வலிமை மிக்க ஆயுதம். இதுவரை செலுத்திய ஓட்டு உங்களுக்கு என்ன தந்துள்ளது என்பதை எண்ணி பாருங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.
பாட்டு பாடிய சீமான்
ஓட்டுப் போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத!கண்ட கண்ட சின்னங்களை கண்டு கலங்கி நிற்காத!
ஓட்டுப் போட போற ஐயா! ஓட்டுப் போட போற அம்மா!ஒதுங்கி நிற்காத! கண்ட கண்ட சின்னங்களை கண்டு கலங்கி நிற்காத!
உழைக்கும் மக்கள் சின்னம் இந்த ஒலிவாங்கி சின்னம்! நாள்தோறும் பாடுபட்டோம்! ஆனாலும் துன்ப பட்டோம்!
யார் யாருக்கோ ஓட்டு போட்டோம்! துன்ப பட்டோம்:இந்த நிலை மாற நான் வேற என்ன கூற!. இவ்வாறு சீமான் பாட்டு பாடி ஓட்டு சேகரித்தார்.

