ADDED : ஜூன் 28, 2024 02:47 AM

அரசு துறைகளில், 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் என, தேர்தல் வாக்குறுதி அளித்து விட்டு, 2026 ஜனவரிக்குள், 75,000 பேருக்கு அரசு வேலை என, முதல்வர் அறிவித்துள்ளார். இதன் வழியாக, தேர்தல் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படாதது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 65,483 பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்டுள்ளன. இவற்றில் தேர்வு முகமை வழியே, கருணை அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டோர் விபரத்தை தெரிவிக்க வேண்டும். முறையான சம்பள விகிதத்தில் எத்தனை பேர், தொகுப்பூதியத்தில் எத்தனை பேர் என்பதை தெரிவிக்க வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில், 3.30 லட்சம் பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டிய நிலையில், 65,000 பணியிடங்கள் மட்டும் நிரப்பியது, அரசின் மெத்தனப் போக்கையும், திறமையின்மையையும் படம் பிடித்து காண்பிக்கிறது. இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பை வழங்குவதில், தி.மு.க., அரசுக்கு அக்கறை இருக்குமானால், காலியாக உள்ள அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
- ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வர்