ADDED : மார் 03, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேங்கைவயல் விவகாரத்தில் தீர்வு இல்லை. தி.மு.க., - எம்.எல்.ஏ., வீட்டில் பட்டியலின சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதிலும் உரிய நடவடிக்கை இல்லை. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், இது குறித்தெல்லாம் வாய் திறப்பதில்லை; பாவம் அவர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், அவர்களுக்காக தி.மு.க., கூட்டணியில் இருக்கும் கம்யூ., கட்சியினர் போராடுகின்றனர். இப்படி பல தரப்பினரும் தி.மு.க., மீது கோபமாக உள்ளனர். அது தேர்தலில் எதிரொலிக்கும்.
- செல்லுார் ராஜு, முன்னாள் அமைச்சர்.