தமிழக அரசியலை மாற்றக்கூடிய மந்திர சொல் இடை தேர்தல் : அண்ணாமலை
தமிழக அரசியலை மாற்றக்கூடிய மந்திர சொல் இடை தேர்தல் : அண்ணாமலை
UPDATED : ஜூலை 04, 2024 09:24 PM
ADDED : ஜூலை 04, 2024 09:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : தமிழக அரசியலை மாற்றக்கூடிய மந்திர சொல்லாக விக்கிரவாண்டி இடை தேர்தல் இருக்கும் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதியில் பா,ம.க.,வேட்பாளரை ஆதரித்து பேசிய அண்ணாமலை கூறியதாவது: 14 ஆண்டுகளுக்கு பின்னர் பாமக இடை தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் மது ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு இதுவரையில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோடு இடை தேர்தலில் மக்களை பட்டியில் அடைத்து வைத்து இருந்தனர். தமிழக அரசியலை மாற்றக்கூடிய மந்திர சொல்லாக விக்கிரவாண்டி இடை தேர்தல் இருக்கும். திமுக வாக்கு சதவீதம் 33-ல் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.