மேட்டுப்பாளையம் அருகே மினி பஸ் கவிழ்ந்தது; சிறுமி பலி
மேட்டுப்பாளையம் அருகே மினி பஸ் கவிழ்ந்தது; சிறுமி பலி
UPDATED : மே 03, 2024 09:34 PM
ADDED : மே 03, 2024 07:47 PM

சென்னை பெரம்பூரில் இருந்து அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்யும், 16 பெரியவர்கள், இவர்களின் குழந்தைகள் 15 பேர் என 31 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். 30ம் தேதி இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையம் வந்தனர். அங்கிருந்து ஆன்லைனில் பதிவு செய்த மினி பஸ் வாயிலாக ஊட்டிக்குச் சென்றனர். ஊட்டியில் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்த பின், இன்று மாலை ஊட்டியில் இருந்து, 5 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்ல மினி பஸ்சில் வந்து கொண்டிருந்தனர்.
கோத்தகிரி சாலை வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி வரும்போது, பவானிசாகர் காட்சி முனை பகுதியில், எதிர்பாராத விதமாக மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அனைவருமே காயமடைந்தனர். இவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். படுகாயம் அடைந்த சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.