ADDED : செப் 05, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் சார்பில், நேற்று தலைமைச் செயலகத்தில், கோரிக்கை முழக்க கூட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து, சங்கத் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
சொன்னதை செய்வோம் எனக் கூறும் தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது. அரசு ஊழியர்கள் இனியும் பொறுமை காக்கப் போவது இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் வலுவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.