ADDED : ஜூலை 26, 2024 07:22 PM

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 5-ம் தேதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் என 16 பேர் வரையில் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதில் இரண்டு பெண்களும் அடங்குவர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீசாரின் என் கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மேலும் இவ்வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் மணலி மாத்தூரை சேர்ந்த வக்கீல் சிவா என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இன்று (26.07.2024) பெரம்பூரை சேர்ந்த பிஎஸ்பி கட்சியின் முன்னாள் தலைவர் பெரம்பூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.இவர் ஆற்காடு சுரேஷ் உறவினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவரின் கைதை அடுத்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக ஆனது.
இதனிடையே இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்வேறு கட்சிகளை சேர்ந்த வக்கீல்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளது.