வீடு புகுந்து சாவகாசமாக திருடிய மூதாட்டி சுற்றிவளைப்பு
வீடு புகுந்து சாவகாசமாக திருடிய மூதாட்டி சுற்றிவளைப்பு
ADDED : செப் 05, 2024 09:13 PM
மாங்காடு,:மாங்காடு, காமாட்சி அம்மன் நகரில், வலம் வந்த 70 வயது மூதாட்டி, திறந்திருந்த ஒரு வீட்டினுள் திடீரென நுழைந்தார்.
அந்த வீட்டில், பெண்மணி சமையல் அறையில் இருந்துள்ளார். மற்றவர்கள் வெளியில் சென்ற நேரத்தில், சாவகாசமாக ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டு சென்றார்.
பீரோவை திறந்த மூதாட்டி, 4 சவரன் நகையை எடுத்துக்கொண்டு, மிகவும் சாதாரணமாக வாசல் கதவை கடந்தபோது, அந்த வீட்டு பெண்மணியிடம் சிக்கினார்.
மூதாட்டியிடம் விசாரிக்கும்போது, பேச்சை மாற்றி மாற்றி பேசி, அங்கிருந்து ஓட ஆரம்பித்தார். சந்தேகமடைந்த பெண்மணி கூச்சலிட்டதை அடுத்து, அக்கம் பக்கத்து வீட்டினர் மூதாட்டியை பிடித்தனர்.
அவரை சோதனை செய்தபோது நகைகள் இருந்தன. அந்நகைகள், தன்னுடையது என, திருட்டு நடந்த வீட்டின் பெண் கூறியதை அடுத்து, மூதாட்டியை மாங்காடு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், மூதாட்டி தாம்பரத்தைச் சேர்ந்த பாரிடா, 70, என்பது மட்டுமே தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்டடதை போல் மூதாட்டி உளறுவதால், அவரிடம், போலீசார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.