ADDED : ஆக 28, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பாஸ்போர்ட் சேவை இணையதளம், நாளை இரவு முதல் செப்டம்பர் 2 வரை இயங்காது என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக, பாஸ்போர்ட் சேவை இணையதளம், நாளை இரவு, 8:00 மணி முதல் செப்டம்பர், 2 காலை, 6:00 மணி வரை இயங்காது. இதன் காரணமாக, வரும், 30ல் திட்டமிடப்பட்டிருந்த, அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அன்று சந்திப்புக்காக உறுதி அளிக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., வழியே தகவல் தெரிவிக்கப்படும். மேலும், 30ம் தேதி சென்னை அண்ணா சாலையில், ராயலா டவரில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது.