ADDED : ஜூன் 17, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒருவர் போனில் மிரட்டல் விடுத்தார்.
ரயில் நிலையத்தில் சோதனைகள் நடந்தன. விசாரணையில் குண்டு மிரட்டல் விடுத்த திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்த சிவபெருமாள் 42, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் திருநெல்வேலி டவுன் நயினார் குளம் மார்க்கெட்டிலும் குண்டு இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வெடிகுண்டுகள் எங்கும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எதற்காக மிரட்டல்விடுத்தார் என அவரிடம் விசாரணை நடக்கிறது.