ADDED : ஜூலை 06, 2024 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான, விசாரணை நேற்று மாலை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
கரூரைச் சேர்ந்த தமிழினியன் 29, விசாரணையை அலைபேசி வீடியோ காலில், சிலருக்கு ஒளிபரப்பு செய்துள்ளார். இதுகுறித்து, நீதிமன்ற எழுத்தர் வீரகுமார் கொடுத்த புகார்படி, தமிழினியனை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.
தமிழினியன், வீடியோ காலில் முன் ஜாமின் கேட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினரும், அ.தி.மு.க., - ஐ.டி., விங்க் பொறுப்பாளருமான ஒருவருக்கு, ஒளிபரப்பு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.