ADDED : ஏப் 15, 2024 10:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,790க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதனால் நகை வாங்க நினைக்கும் மக்கள் கலக்கமடைந்தனர்.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 08) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து, ரூ.54,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,790க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை என்ன?
வெள்ளி விலை கிராமுக்கு ரூ 50 காசுகள் உயர்ந்து ரூ.89க்கு விற்பனை செய்யப்படுகிறது.

