ADDED : மார் 11, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, வி.சி., எம்.பி.,க் களான திருமாவளவன், ரவிகுமார் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் அளித்த மனு:
மத்திய அரசின் 16வது நிதிக்குழு, மாநிலங்களில் வரி பகிர்வை குறைக்க பரிந்துரைத்துள்ளதாகவும், அதன்படி, மாநிலங்களுக்கான நிதி பகிர்வை, 41 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக குறைக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலங்களுக்கான நிதி பகிர்வை, 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிதி பகிர்வு குறைக்கப்பட்டால், மாநிலங்களுக்கான நிதி சுமை அதிகரிக்கும்.
எனவே, மாநிலங்களின் நிதி பகிர்வை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.