ADDED : செப் 07, 2024 07:17 PM
உலகெங்கும் வாழும் ஹிந்துக்கள், தங்கள் வாழ்வின் எந்த செயலையும் விநாயக பெருமானை வணங்கி தான் துவங்குவர். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு, எந்தெந்த வழிகளில் நெருக்கடிகளை கொடுக்க முடியுமோ, அத்தனையையும் ஹிந்து மதத்தை எதிர்க்கும் தி.மு.க., செய்து வருகிறது
தி.மு.க.,வுக்கு ஹிந்து மதத்தின் மீது, ஹிந்து கடவுள்கள் மீது வெறுப்பு இருக்கலாம். ஆனால், அரசு என்பது அனைவருக்குமானது. தி.மு.க., தலைவராக ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாமல் இருக்கலாம்; அது, அவரது உரிமை.
ஆனால், அனைவருக்கும் பொதுவான முதல்வர் பதவியில் இருந்து கொண்டு, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது, ஹிந்துக்களை அவமதிக்கும் செயல்.
- வானதி சீனிவாசன்,
தலைவர்,
பா.ஜ., தேசிய மகளிரணி.