ADDED : செப் 15, 2024 12:41 AM
8.9.24 முதல் 14.9.24 வரை
திருப்பூர் மாவட்டம் எல்லப்பாளையம் தோட்டத்தில் வசித்து வந்த பழனிசாமி, முன் விரோதம் காரணமாக தன் மருமகன் ராஜ்குமாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குன்னுவாரன் கோட்டையை சேர்ந்த கபிலன், முறை தவறி, 16 வயது சிறுமியை காதலித்த விவகாரத்தில் கொல்லப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், மது போதையில் ஏற்பட்ட தகராறில், தலையில் கல்லை போட்டு நண்பர்களால் கொலை செய்யப்பட்டார்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்த ரவுடி சுந்தர்ராஜ், சித்தப்பா வீட்டு மாடியில் துாங்கிய போது முன் விரோதத்தால் கொல்லப்பட்டார்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சி பகுதியில், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறில், வாஷிங் மிஷினில் சாக்கு மூட்டையில் அடைத்து, 3 வயது குழந்தை சஞ்சய் கொல்லப்பட்டான்
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் கள்ளக்காதல் தகராறில், பெசன்ட் நகர் கடற்கரையில் கொல்லப்பட்டார்
ராமநாதபுரம் மாவட்டம், புழுதிகுளத்தை சேர்ந்த மோகன், முன் விரோதத்தில் உறவினரால் கொல்லப்பட்டார்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் கும்மனுார் அருகே லாரியை ஓட்டிச்சென்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஹரிஷை, மூன்று வாலிபர்கள் அடித்துக் கொன்றனர்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆத்துாரை சேர்ந்த ரவுடி தனுஷ், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பில்லாக்குப்பத்தை சேர்ந்த வெல்டர் அஜய், அங்குள்ள தைலமர தோப்பில், மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே பெரியசேவல் கிராமத்தை சேர்ந்த நரசம்மாள், சொத்து தகராறில் தன் பேரன்களால் உருட்டு கட்டையால் அடித்து கொல்லப்பட்டார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில், மேலநீலிதநல்லுாரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் வெள்ளியப்பன், கோவில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கொல்லப்பட்டார்
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பாறையூரை சேர்ந்த பழனி என்பவர், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்
கோவை செல்வபுரம் பழைய தோட்டம் பகுதியில், முன் விரோதம் காரணமாக கோகுலகிருஷ்ணன் என்பவர் கொல்லப்பட்டார்.