ADDED : செப் 09, 2024 10:02 AM
தமிழ்நாடு ஓய்வு பெற்ற நீதிபதிகள் நலச்சங்க துணைத்தலைவர் கே.ராமசாமி பேட்டி:
எங்கள் சங்கத்தில், 80 வயதை கடந்த நீதிபதிகளும் உள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதிகள், மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்றால், அதற்கான செலவை அரசிடம் இருந்து பெறலாம். அதன்படி, ஓய்வு பெற்ற நீதிபதிகள், 10 பேரின் மருத்துவ செலவை விடுவிக்க கோரி விண்ணப்பித்துள்ளோம். ஓராண்டுக்கு மேலாகியும் மருத்துவ செலவை அரசு வழங்காமல் உள்ளது.
உயர் நீதிமன்றம் வாயிலாகவும், அரசுக்கு நினைவுப்படுத்தி விட்டோம். முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
மருத்துவ செலவை விடுவிக்க கோரி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஓய்ந்து விட்டோம். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா அல்லது உண்ணாவிரதம் இருக்கலாமா என, ஆலோசித்து வருகிறோம். நீதி வழங்கியவர்களுக்கே நீதி இல்லை என்பது வேதனை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -