எம்.பி.பி.எஸ்., இட அங்கீகாரம் கல்லுாரிகளுக்கு அவகாசம்
எம்.பி.பி.எஸ்., இட அங்கீகாரம் கல்லுாரிகளுக்கு அவகாசம்
ADDED : மார் 29, 2024 12:40 AM
சென்னை:எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து கொள்வதற்கான உறுதியளிப்பு சான்றுகளை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் ஏப்.10 வரை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவ கல்வி வாரிய இயக்குனர் சாம்பு சரண் குமார் வெளியிட்ட அறிவிப்பு:
எம்.பி.பி.எஸ்., படிப்பை துவங்க அனுமதி பெற்ற மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை அனைத்தும் தங்கள் சுய விபரங்கள் அடங்கிய உறுதியளிப்பு சான்றை ஆண்டுதோறும் என்.எம்.சி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது அவசியம். அங்கீகாரம் புதுப்பித்தலுக்கும் அத்தகைய பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சான்றுகளை பதிவேற்றம் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, என்.எம்.சி., இணையதளத்தில் உறுதியளிப்பு சான்றுகளை சமர்பிக்க வேண்டும். அதற்கான அவகாசம் ஏப்., 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

