ADDED : ஜூலை 12, 2024 11:38 PM
சென்னை:'குரூப் - 1' பதவிகளுக்கான முதல்நிலை தகுதித்தேர்வு இன்று நடக்கிறது. இதில், 2.38 லட்சம் பேருக்கு அனுமதி அளித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மற்றும் கூட்டுறவு துணை பதிவாளர் ஆகிய ஏழு பதவிகளில், 90 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான குரூப் - 1 முதல்நிலை தகுதித்தேர்வு, இன்று 797 தேர்வு மையங்களில் நடக்கிறது. இதில், 2.38 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
சென்னையில் 124 தேர்வு மையங்களில், 37,891 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகளுடன், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

