உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 10, 2024 05:45 AM

அ நிறம் | அளவு
சென்னை : தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என, தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்து உள்ளார்.
முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. ஒரு மாதம் நோன்பு முடிந்து, ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவர்.
அந்த வகையில், இந்த ஆண்டு, மார்ச் 12 முதல் நோன்பு கடைப்பிடித்து வந்தனர்.
ரமலான் மாதத்தின் முதல் பிறையின் அடிப்படையில், ரம்ஜான் பண்டிகைக்கான தேதி அறிவிக்கப்படும்.
நேற்று பிறை தென்படாததால், ரம்ஜான் பண்டிகை நாளை, அதாவது, ஏப்., 11ல் கொண்டாடப்படும் என, தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்து உள்ளார்.
