ADDED : ஏப் 07, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தியாகராஜர் மைதானத்தில் இன்று 'தாரே 2024' ஓட்டம் நடப்பதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, ஸ்ரீ ஜகன்னாத் சாலை, ஜோர் பாக் சாலை, நஜாப் கான் சாலை, சந்து லால் பால்மிகி சாலை, குஜ்ஜார் சவுக், சேவா நகர் சிக்னல், ரயில்வே சுரங்கப்பாதை, லோதி காலனி மற்றும் தியாகராஜர் நகர் ஆகிய இடங்களில் இன்று காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த வழியாக பயணிப்போர் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என மாநகரப் போலீஸ் அறிவுறுத்திஉள்ளது.

