ADDED : மே 10, 2024 11:30 PM
சென்னை:சென்னையில், சி.பி.ஐ., மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னையில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். சி.பி.ஐ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் கே.தனசேகரன், டி.மலர்வாலண்டினா, எஸ்.எழில்வளவன், எஸ்.ஈஸ்வரனே மற்றும் சென்னை தொழில் தீர்ப்பாய தலைவர் தீப்தி அறிவுநிதி, மாநில போக்குவரத்து மேல்முறையீடு தீர்ப்பாய தலைவர் ஏ.டி.மரியா கிளேட் ஆகியோரும் இடமாற்றப்பட்டு உள்ளனர்.
இதேபோல, சென்னை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மூத்த சிவில் நீதிபதிகள், 13 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் அறிவித்துள்ளார்.