துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை துவக்கம்
துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் புதிய ரயில் சேவை துவக்கம்
ADDED : ஜூலை 19, 2024 12:47 AM
சென்னை,:பயணியரின் கோரிக்கையை ஏற்று, வாரம் இருமுறை இயக்கும் வகையில், துாத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயிலை, வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த புது ரயில் சேவையை, மத்திய இணை அமைச்சர் முருகன், மேட்டுப்பாளையத்தில் இன்று கொடியசைத்து துவங்கி வைக்கிறார்.
இதேபோல், மூன்று பயணியர் ரயில்களின் சேவை நீட்டிப்பையும் அவர் துவங்கி வைக்கிறார்.
துாத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:40 மணிக்கு மேட்டுப்பாளையம் செல்லும். மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறுகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4:20 மணிக்கு துாத்துக்குடி செல்லும்.
இந்த ரயில், கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, கோவை வழியாக இயக்கப்படுகிறது
கோவை - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் இரு பயணியர் ரயில்களும், நாளை முதல் போத்தனுார் வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன
கோவை - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 22ம் தேதி முதல் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்
கர்நாடகா மாநிலம் மைசூரு - மயிலாடுதுறை விரைவு ரயில் இன்று முதல் கடலுார் துறைமுகத்துக்கு நீட்டித்து இயக்கப்பட உள்ளது
மயிலாடுதுறை - திருச்சி இடையே வாரம் ஐந்து நாட்களில் இயக்கப்படும் விரைவு ரயில், நாளை முதல் தினமும் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.