ADDED : ஜூன் 02, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இருவர் ஓய்வு பெற்றனர்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா; தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குனர் உமாசங்கர் ஆகியோர், நேற்று முன்தினம் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
ஹன்ஸ்ராஜ் வர்மா, 1986ம் ஆண்டிலும், உமாசங்கர் 1990ம் ஆண்டிலும், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தனர். பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த இருவரும், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர்.
தொழில் துறை சிறப்பு செயலர் பல்லவி பல்தேவ் கூடுதல் பொறுப்பாக, தொழில் முதலீட்டு கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பை கவனிப்பார்.
இதற்கான அரசாணையை, தொழில் துறை செயலர் அருண்ராய் வெளியிட்டுள்ளார்.